நீட் தேர்வு என்பது மாணவர்களை மருத்துவர்கள் ஆக்கவா அல்லது மன நோயாளி ஆக்கவா என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது புரட்சித் தலைவி அம்மாவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
‘ஆத்தாடி தெய்வக்குத்தம்’ என்ற பெயரில் கவிதை ஒன்று நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் எழுதப்பட்டுள்ளது. அதில் நீட் தேர்வால் தமிழ்நாடு மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சாறு எடுத்து வருபவர்களுக்கும் சக்கையை கொண்டு வருபவர்களுக்கும் சம உரிமை என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது. நீட் தேர்வில் படிக்காத பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதாகவும் அக்கவிதையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நீட் தேர்வு குறித்த தீர்ப்பை விமர்சித்தால் தெய்வக்குத்தத்திலும் மேலான உச்ச நீதிமன்றக் குத்தமாகிடும் என்றும் அக்கவிதையில் எழுதப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்தது குறித்தும் அதில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இறுதியில் இந்த நீட் தேர்வு மாணவர்களை மருத்துவர்கள் ஆக்கவா அல்லது மன நோயாளி ஆக்கவா என்று அக்கவிதை முடிக்கப்பட்டுள்ளது.