தொடர் விடுமுறையை ஒட்டி குன்னூரில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
இரண்டாவது சீசனை முன்னிட்டு, டால்பினோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ்பார்க் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு பூத்துக் குலுங்கும் ஆயிரக்கணக்கான வண்ண மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன. ஏரியில் மினி படகு சவாரி செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.