தமிழ்நாடு

நிலவொளியில் பாம்பன் கடலில் கலர் கலராக மின்னும் விளக்குகள்! எங்கிருந்து வந்த ஒளி தெரியுமா?

webteam

பாம்பன் கடலில் கலர் கலராக மின்னும் மின்னணு விளக்களை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர் இந்த நிலையில் பகலில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பும் மீனவர்கள் இரவு நேரங்களில் தங்களுடைய நாட்டுப் படகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்திவைப்பர்.

அப்போது அந்த வழியாக இரவு நேரங்களில் வரும் விசைப்படகுகள் தங்களுடைய நாட்டு படகுகள் மீது மோதி விபத்துக்கள் ஏதும் நேர்ந்து விடாமல் தடுக்க் பேட்டரி மூலம் எரியும் மின்னணு விளக்குகளை எரியவிடுவர். அது பல்வேறு வண்ணங்களில் கண்கவரும் வண்ணம் எரிகிறது.

இதையடுத்து பாம்பன் சாலை பாலத்தை கடந்து ராமேஸ்வரத்திற்குள் வரும் சுற்றுலா பயணிகள் கடலில் கலர் கலராக எரியும் மின்னணு விளக்குகளை வியப்புடன் வாகனங்களை நிறுத்தி பார்த்துச் செல்கின்றனர்.