கர்னல் W.M எல்லீஸ்  - மேட்டூர் அணை
கர்னல் W.M எல்லீஸ் - மேட்டூர் அணை கோப்புப்படம்
தமிழ்நாடு

90 ஆண்டுகளாக வலிமையோடு இருக்கும் மேட்டூர் அணை! காரணம் யார் தெரியுமா?

Jayashree A

தமிழகத்திற்கு நீர் ஆதாரமாக இருப்பது காவிரி ஆறு. அப்படிப்பட்ட காவிரிக்கு, கர்நாடகாவிலிருந்து நீர் வரும். அந்த நீர் வீணாகாமல் தடுக்கவும், நீரை அப்படியே டெல்டா பாசனத்திற்கு சேமிக்கவும் 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது மேட்டூர் அணை. இந்த அணை இன்றளவும் பலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் கட்டமைப்பு.

100 ஆண்டுகளுக்கு முன்புவரை, காவிரி மீன்பிடிப்புகளில் மழைப்பெய்யும் போதெல்லாம் காவிரி நீர் வீணாகியே வந்தது. அதனால் 1925ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் மேட்டூர் அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.

mettur dam

1935ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கவர்னர் ஸ்டான்லியால் திறக்கப்பட்டது இது. இதனால்தான் மேட்டூர் அணை ஸ்டான்லி நீர் தேக்கம் என பெயரிடப்பட்டது. இது இன்றளவும் சிதையாமல் வலிமையுடன் இருக்க காரணம் கர்னல் W.M எல்லீஸ் என்கிறார்கள் தற்போதைய பொறியாளார்கள்