தமிழ்நாடு

சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை

சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை

Rasus

சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.காம். படித்து வரும் மாணவி அஷ்வினி. இந்நிலையில் கல்லூரி வாசலில் மாணவி அஷ்வினியை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியிருக்கிறார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவி அஷ்வினியை பொதுமக்கள் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஷ்வினி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடைய அஷ்வினியை கத்தியால் குத்திய இளைஞரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்ன காரணத்திற்காக மாணவி அஷ்வினியை அந்த இளைஞர் கொலை செய்தார் என்பது தெரியவில்லை. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.