தேனி மாவட்டம் போடி அருகே ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பது போல் நடித்து முதியவரை ஏமாற்றிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள விஸ்வாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேல்முருகன். இவர் போடியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் ஏடிஎம் பயன்படுத்துவது தொடர்பாக அவருக்கு குழப்பம் இருந்துள்ளது. அப்போது ஏடிஎம்-க்கு வந்த ராஜ்குமார் என்ற கல்லூரி மாணவர் விவசாயிக்கு உதவி செய்வதாக கூறி பணம் எடுப்பது போல உதவியுள்ளார்.
பின்பு விவசாயி வேல்முருகனிடம் 8 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளார். பணம் பறிபோனதை தாமதமாக உணர்ந்த விவசாய வேல்முருகன் போடி நகர காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கல்லூரி மாணவரான ராஜ்குமாரை கைது செய்தனர்