பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர்களும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோவினர், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று முதல் கல்லூரி ஆசிரியர்களும், பேராசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வேலைநிறுத்ததில் ஈடுபடுவதோடு, போராட்டங்களிலும் ஈடுபட போவதாக தெரிவித்தனர். அத்துடன் காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.