தமிழ்நாடு

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: கல்லூரி நிர்வாகி கைது

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: கல்லூரி நிர்வாகி கைது

webteam

நாகர்கோவில் அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் கல்லூரி நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

நாகர்கோவில் அடுத்த இறச்சகுளத்தில் தனியார் துணை மருத்துவக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் வேலை செய்த‌ வரும் ஆசிரியை ஒருவரிடம் கல்லூரி நிர்வாகி ரவி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதைத்தொடர்ந்து, கல்லூரியில் பணியாற்று‌ம் ஆசிரியைகள், மாணவிகளிடம் காவல் துறை விசாரணை நடத்தினர். அதில், கல்லூரி நிர்வாகி ரவி, ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகி ரவி கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக கல்லூரியின் இணை இயக்குநர்கள் நளினி, கலா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.