கோவையில் புற்றுநோயாளிகளுக்கு ‘விக்’ செய்வதற்காக கல்லூரி மாணவிகள் தங்கள் தலைமுடியை தானம் செய்தனர்.
கோவை பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியில் புற்றுநோயாளிகளுக்கு ‘விக்’ செய்வதற்காக முடி தானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள், ஊழியர்கள் பங்கேற்று முடிதானம் செய்தனர். புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவும், முடிதானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த நிகழ்ச்சியானது முன்னெடுக்கப்பட்டது.
இதில் முடிதானம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் தெரிவித்தனர். புற்றுநோய் சிகிச்சையின் போது முடி உதிர்தல் இயல்பாக நடக்கும் என்றாலும், அது நோயாளிகளை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தானமாக பெறப்படும் முடியைக்கொண்டு ‘விக்’ தயாரித்து, அதனை புற்றுநோயாளிகளுக்க கொடுப்பது பயனளிக்கும் என நிகழ்ச்சியில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.
முடிதானம் அளித்த மாணவிகளிடம் இருந்து 10 அங்குலம் மட்டுமே முடி தானமாக வெட்டி எடுக்கப்பட்டது. மேலும், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு அறிவுரைகள் இந்நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டன.