டெங்கு கொசுவை அழித்து காய்ச்சலை கட்டுபடுத்த ஒவ்வொரு தனி மனிதனும் செயல்பட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தாரமங்கலம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 கிராமங்களில் டெங்கு ஒழிப்புக்கான மெகா தூய்மை பணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி துவக்கி வைத்து, நேரடியாக சுகாதார பணிகளில் ஈடுபட்டார். பின்னர் வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொண்ட அவர், வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்து கொள்ள ஆலோசனைகள் வழங்கினார். பொதுமக்கள் போதுமான விழிப்புடன் இருந்து டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு தனி மனிதனும் டெங்குவை ஒழிக்கும் பணியில் அவரவர்களாக முன் வந்து ஈடுபட வேண்டும் என கேட்டுகொண்ட அவர், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 100 சதவீதம் டெங்கு ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார். தாரமங்கலம் வட்டார கிராமங்களில் இன்று ஒரே நாளில் 5,000 பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டனர்.