தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: விரிசலான பாலத்தை பார்வையிட்டார் ஆட்சியர்

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: விரிசலான பாலத்தை பார்வையிட்டார் ஆட்சியர்

webteam

தஞ்சையில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே விரிசல் அடைந்த ரயில்வே மேம்பாலத்தை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் ஆய்வு செய்தார்.

தஞ்சையில் சாந்தபிள்ளை ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்‌‌றும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 800 மீட்ட‌ர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. இறுதியில் 52 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு வரும் 29 ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தச்சூழலில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியிட்டப்பட்டது. இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பாலத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும் பாலத்தை சரிசெய்யவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.