கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள் மற்றும் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், 5 சவரன் வரை கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை தயார் நிலையில் வைக்குமாறு தெரிவித்துள்ளார். கடன் பெற்றவர்களின் கே.ஒய்.சி விவரங்கள், குடும்ப அட்டை விவரங்களை தயார் நிலையில் வைக்கவும் கூட்டுறவு வங்கிகளுக்கு ஆணை பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பான விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு வருகின்ற 16 ஆம் தேதிக்குள் அனுப்புமாறும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.