தமிழ்நாடு

அடுத்த 2 நாட்களுக்கு இரவில் குளிர் இருக்கும்: வெதர்மேன் கணிப்பு

rajakannan

அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரங்களில் அதிக குளிர் இருக்கும் என்று வெதர்மேன் கணித்துள்ளார்.

மழை, புயல் உள்ளிட்ட வானிலை தொடர்பான குறித்த தகவல்களை வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வவ்போது பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது இரவு நேரங்களில் அதிக குளிர் நிலவுவது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெதர்மேன் சில தகவல்களை பதிவிட்டுள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரங்களில் அதிக குளிர் இருக்கும் என்று வெதர்மேன் கணித்துள்ளார். குளிரானது குறிப்பாக  கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருத்தனி, நாமக்கல், சேலம் மற்றும் திருவண்ணாமல் உள்ளிட்ட  தமிழகத்தின் வட மாவட்டங்களான அதிகமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

‘பெங்களூர் மற்றும் மைசூரில் அதிக அளவில் குளிர் இருக்கும். ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக 4-5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தற்போது, வால்பாறையில் 6-7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையில் 20 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும். சென்னை புறநகர் பகுதியில் 17-18 டிகிரி செல்சிஸ் ஆக இருக்கும்’ என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.