தமிழ்நாடு

கோயம்பேடு சந்தை செப்டம்பர் 28ஆம் தேதி திறப்பு

கோயம்பேடு சந்தை செப்டம்பர் 28ஆம் தேதி திறப்பு

webteam

கோயம்பேடு சந்தை செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் "கொரோனா பரவலைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை கடந்த ஏப்ரல் மே மாதங்களில் மூடப்பட்டது. இதையடுத்து தற்காலிக காய்கறி சந்தை திருமிழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் செயல்படத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அவை செயல்படத் தொடங்கின. இதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தற்காலிக சந்தைகளில் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் அங்கு வியாபாரம் செய்வது கடினம் என வணிகர் சங்க பிரதிநிதிகள் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் திறந்திட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் இன்று மாலை துணை முதல்வர் தலைமையில் உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறப்பது எனவும் முதற்கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி 18.9.2020 அன்றும், அதற்கு அடுத்த கட்டமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி 28.9.2020 அன்றும், அதன் பிறகு அடுத்த கட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.