தமிழ்நாடு

கோவை மாணவி உயிரிழப்பு: சான்றிதழ் தயாரிக்க உதவியவர்களிடம் விசாரணை

கோவை மாணவி உயிரிழப்பு: சான்றிதழ் தயாரிக்க உதவியவர்களிடம் விசாரணை

Rasus

கோவை மாணவி உயிரிழக்க காரணமாக இருந்த பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவியவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவ-மாணவிகள் பேரிடர் காலங்களில் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என நடத்தப்பட்ட பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரியை பயிற்சியாளர் தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பயிற்சியாளரின் அலட்சியமே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது. இதனிடையே உயிரிழந்த மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சென்னையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை என கூறியது. இந்நிலையில் பயற்சியாளர் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் மற்றும் தாமோதரன் ஆகிய இருவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.