தமிழ்நாடு

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா

webteam

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே, அவருடைய மகள், மருமகன், பேத்தி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது எம்.எல்.ஏ.வுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மதுரை சென்று திரும்பிய நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து  அவர் தற்போது ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.