தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு எதிரொலி: இருவரது வீடுகளில் நாகை போலீசார் சோதனை

webteam

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையில் வழக்கு நிலையிலுள்ள இருவரது வீடுகளில் நாகை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் நாகை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சதேகத்திற்குறிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் தமிழக காவல்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி தேசிய புலனாய்வு முகமையில் வழக்கு நிலுவையில் உள்ள சிக்கல் பகுதியைச் சேர்ந்த அசன்அலி மற்றும் மஞ்ச கொள்ளை பகுதியைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சுமார் ஒருமணி நேரம் காவல் துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து விசாரணையை முடித்துவிட்டு காவல் துறையினர் புறப்பட்டனர். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இருவரது வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.