தமிழ்நாடு

கோவை: மிரட்டல் வருவதாக குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்

கோவை: மிரட்டல் வருவதாக குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்

kaleelrahman

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுனர் ஜீவானந்தம் என்பவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


பாஜகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது நிலத்தை ஆக்கிரமிக்க முயல்வதாகவும், குடும்பத்தினரை மிரட்டுவதாகவும் தெரிவித்து தனது மனைவி மற்றும் குழந்தைகள் மேல் பெட்ரோல் ஊற்றியதோடு தனக்கும் பெட்ரோலை ஊற்றி ஜீவானந்தம் என்பவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்றவர்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த பத்திரிகையாளர்கள் தடுத்து தண்ணீர் ஊற்றி காப்பாற்றி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.


போலீஸ் விசாரணையில் மணிகண்டன் பா.ஜ.க பிரமுகர் இல்லை என்பதும், இந்து முன்னேற்றக் கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்பதும் தெரியவந்தது. காவல்துறையினர் ஜீவானந்தத்தை விசாரணைக்காக அழைத்து சென்றபோது தங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வந்த வளர்ப்பு நாயையும் காவல்துறை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு காவல் நிலையத்துக்கு சென்றனர். சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.