தமிழ்நாடு

கோவை: சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் - அச்சத்தில் பொதுமக்கள்

webteam

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள ஸ்டேட் பாங்க் சாலை, கடந்த ஜனவரி மாதம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டது. இந்நிலையில், குடிநீர் குழாய் பதிக்கபட்ட பின்பு குழி மூடப்பட்டு சாலை போடப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கோவையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ரயில் நிலையம் எதிரில் உள்ள அந்த சாலையில் நேற்றிரவு திடீரென பள்ளம் ஏற்பட்டது. சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து திடீரென பள்ளத்தில் யாரும் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் பதித்த பின்பு சாலையை முறையாக போடாததன் காரணமாவே சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டும் பொது மக்கள், அதை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.