கனகராஜ் புதியதலைமுறை
தமிழ்நாடு

”பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வேலை பார்த்தும் அவப்பெயரே மிச்சம்”-போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்!

கடந்த வாரம் மருத்துவக் கல்லூரி முதல்வா் கள ஆய்வில் உயா் அதிகாரி ஒருவா், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் இறக்கக் கூடாது. ஒருவேளை இறந்தால் துறை மருத்துவா் மீதும், கல்லூரி முதல்வா்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தாா்.

PT WEB

கோவை மாவட்டத்தில் 600 அரசு மருத்துவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர்கள் அனைவரும் சிகிச்சை தவிர மற்ற அலுவல் பணிகளில் இன்று பங்கேற்பதை புறக்கணித்துள்ளனர்.

கடந்த வாரம் மருத்துவக் கல்லூரி முதல்வா் கள ஆய்வில் உயா் அதிகாரி ஒருவா், "காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் இறக்கக் கூடாது. ஒருவேளை இறந்தால் துறை மருத்துவா் மீதும், கல்லூரி முதல்வா்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன்" என்று எச்சரித்தாா்.

ஒரே ஒரு நாள் காய்ச்சல் என்று வரும் நோயாளிகளைக்கூட அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டாா்.

நடைமுறைக்கு சாத்தியமில்லாத இதுபோன்ற பல ஆணைகளை பிறப்பிக்கும் அதிகாரிகளைக் கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் என வரும் நோயாளிகள் அனைவரையும், உள்நோயாளியாக அனுமதிக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக மருத்துவசங்கம் மாநிலத்துனைத் தலைவர் கனகராஜ் கூறுவதென்ன...

இந்த போராட்டத்தின் முக்கியமாக நாங்கள் சொல்வது, ஒரு நோயாளி காய்ச்சல் என்று வந்தால், அனைவரையும் அட்மிட் செய்வது என்பது இயலாத காரியம். சிலபேருக்கு காய்ச்சலின் தீவிரம் குறைவாக இருக்கலாம். அவர்களை அட்மிட் செய்ய தேவை இருக்காது. இதுபோக வெகுகாலமாக பணி மருத்துவர்களை அவமரியாதையாக பேசுவது, நோயாளிகள் சிகிச்சை குணமாகாமல் இறந்தால், மருத்துவர்கள்தான் காரணம் என்று வீட்டில் ஓய்வில் இருக்கும் மருத்துவர்களை ஆடிட் என்ற பெயரில் குற்றம் சாட்டுவது நடக்கிறது.

எத்தனை நல்லமுறையில் மருத்துவம் செய்தாலும், டாக்டர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. மீட்டிங்கில் மருத்துவர்களை வரவழைத்து ஒருமையில் பேசி அவர்களை அவமானப்படுத்துவது, குறிப்பாக மகப்பேறு மருத்துவர்கள் மிக மன உளைச்சளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

காலிப்பணியிடங்கள் இத்தனையையும் வைத்துக்கொண்டு அவர்கள் ஒரு நாளைக்கு 20 உதல் 30 மகப்பேறு பார்த்து வருகின்றனர். இதில் நோயாளிக்கோ அல்லது பிறக்கும் சிசுவிற்கோ குறைப்பாடு என்றால் அதற்கு காரணம் மருத்துவர்கள் என்பது தவறான கண்ணோட்டம். ஆகவே இது அனைத்தையும் முன்நிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.” என்றார்.