16 கிலோ கஞ்சா பறிமுதல் pt desk
தமிழ்நாடு

கோவை: ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ஐஸ்வர்யா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டதோடு சோதனை மேற்கொண்டனர். அப்போது பட்னா - எர்ணாகுளம் விரைவு ரயில் கோயம்பத்தூர் இரயில் நிலையத்திற்க வந்தது. இதையடுத்து நடைமேடை 1ல் நின்றிருந்த ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.

Rail

அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று இருந்த பை இருந்துள்ளது. அதை கைப்பற்றிய போலீசார் அதை பிரித்துப் பார்த்தனர். அதில், 16 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அதை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.