தமிழ்நாடு

நாம் தமிழர் நடத்திய சேவல் சண்டை

நாம் தமிழர் நடத்திய சேவல் சண்டை

webteam

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோபிசெட்டி பாளையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் சேவல் சண்டை நடத்தினர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ச.கணபதிபாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தடையை மீறி சேவல் சண்டை போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 15-க்கும் மேற்பட்ட ஜோடி சேவல்களை மோதவிட்டு தரம் பிரித்தனர். மீண்டும் போட்டியில் பங்கேற்ற சேவல்களை வெவ்வேறு ஜோடிகளுடன் மோதவிட்டு வெற்றி பெற்ற சேவல்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

ஏறுதழுவுதல் சேவல் சண்டை ஆகியவை தமிழர்களின் பண்பாடு என்றும் அதை ஒழிக்கவே பீட்டா அமைப்பு இது போன்ற தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறினர். ஏறுதழுவுதல், சேவல் சண்டைகளை அனைத்து பகுதிகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.