தமிழ்நாடு

கோவையில் அம்மன் சிலை முன்பு படம் எடுத்து நின்ற நல்ல பாம்பு - சமூக வலைதளத்தில் வைரல்

webteam

கோவையில் அம்மன் சிலை முன்பு படம் எடுத்து நின்ற நல்லபாம்பு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கோவை வேலாண்டிபாளையம் மருவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (10.03.2023) மாலை கோயிலில் 7 மணி பூஜையின்போது சாமி முன்பு நாகம் படம் எடுத்து நின்றது. இதனை படம் பிடித்த சிலர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது உண்டு. மேலும் அந்த கோவிலின் பின்புறம் புற்று ஒன்று உள்ளது. நாகப்பாம்பு புற்றை விட்டு அவ்வப்போது வெளியே வரும் கோயில் அருகில் தென்படும். அப்போது பக்தர்கள் பரவசமடைந்து அம்மனை அழைத்து வழிபடுவார்கள்.

இந்நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் புற்றை விட்டு வெளியே வந்த நாகப்பாம்பு அம்மன் சிலை முன்பு படம் எடுத்து நின்றதால் பக்தர்கள் ஆச்சரியத்துடன் வழிபட்டு சென்றனர். அதே சமயம் கற்பூரம் காண்பிக்கும் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து நாகப்பாம்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.