தமிழ்நாடு

பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்

பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்

JustinDurai
தொடர் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாலாற்றின் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன. மக்கள் பலர் எந்த பொருட்களையும் எடுக்காமல் அவசர அவசரமாக வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்கள் இல்லங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் பாலாற்றின் கரை ஒரம் மக்கள் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இதனிடையே, நீர்நிலைகளை பார்வையிட பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ள வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளதாகவும், குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.