தமிழ்நாடு

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது ? - இல.கணேசன் பதில்

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது ? - இல.கணேசன் பதில்

webteam

டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் இருக்கும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் கூட்டணி பங்கீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுகின்றன. முன்னால் தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்குப் பிறகு பாஜகவிற்கு இதுவரையில் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அதன் கூட்டணி நிலவரங்கள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், “டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் வரும் 16 முதல் விருப்பமனு விநியோகம் துவங்கும்” என்று தெரிவித்தார்.