தமிழ்நாடு

''கடன் தள்ளுபடியான கூட்டுறவு வங்கி நகைகள் 25ம் தேதி வழங்கப்படும்'' - அமைச்சர் சக்கரபாணி

கலிலுல்லா

நத்தத்தில் தேர்தல் பரப்புரையில் தேர்தல் முடிந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்த 5 பவுன் கீழ் வைத்த நகைகள் 25 தேதி தமிழகம் முழுவதும் வழங்கப்படும் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 18 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி நத்தம் பேருந்துநிலையத்தில் 11 வார்டு உறுப்பினர் சேக் சிக்கந்தர் பாட்சாவை ஆதரித்து இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டார்.

அப்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண நிதி, மற்றும் தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை, 24ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறை விலக்கிக் கொள்ளப்படும், 25 ஆம் தேதி இங்கு யாரெல்லாம் கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகைக்கடன் வைத்துள்ளீர்களோ அந்த நகைகள் திருப்பி தரப்படும் என பேசினார்.