“அன்றாட நிகழ்வாக கொலை சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 கொலைகள் நடந்துள்ளன” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீங்கள் எதுவாக இருந்தாலும் பேசுங்கள்; உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை நான் பேசுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.