மகளிர் உரிமைத் தொகை web
தமிழ்நாடு

கூடுதலாக 17 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை.. திட்டத்தை தொடங்கிவைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

மகளிர் உரிமைத் தொகைக்கான பட்டியலில் விடுபட்டவர்களான 17 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்கும் வகையிலான 2ஆம் கட்ட விரிவாக்க திட்டத்தை தொடங்கிவைக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

PT WEB

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2ஆவது கட்ட திட்டம், 17 லட்சம் பெண்களுக்கு கூடுதலாக உதவியாக இருக்கும். 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' நிகழ்வில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் தங்களின் வெற்றிக்கதைகளை பகிர்ந்து, பெண்கள் முன்னேற்றத்திற்கான அரசின் முயற்சிகளை வெளிப்படுத்த உள்ளனர்.

கூடுதலாக 17 லட்சம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2ஆவது கட்ட விரிவாக்க திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற பெயரில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் ஒன்றிணைந்து, தங்களின் வெற்றிக்கதைகளையும் பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு செய்யும் முன்னெடுப்புகளை வெளிப்படுத்த உள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தற்போது வரை ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்டு வருகிறது.