தமிழ்நாடு

ஊரடங்கால் கொரோனா ஓரளவு குறைகிறது - முதல்வர் ஸ்டாலின்

ஊரடங்கால் கொரோனா ஓரளவு குறைகிறது - முதல்வர் ஸ்டாலின்

Sinekadhara

கடந்த ஒருவார ஊரடங்கால் கொரோனா எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர தளர்வுகளற்ற பொதுமுடக்கம் ஒருவாரம் அமல்படுத்தப்பட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவரும் நிலையில், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், தளர்வுகளற்ற பொதுமுடக்கம் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிப்பு அதிகமுள்ள கோவை மாவட்டத்தை நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடி ஆய்வு செய்யவிருக்கிறார். இதுகுறித்த அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஒருவார ஊரடங்கால் கொரோனா எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது. கொரோனா வரைபடம் தட்டையான நிலையை எட்டவே ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.