தொழில் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் இரண்டையும், ஒரே தராசில் இருக்கும் இரு தட்டுக்களை போல் அரசு எண்ணுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் 3-வது நாள் கூட்டம் நடைபெற்றது. முதல்முறையாக மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருடன் வனத்துறை அலுவலர்களுக்கான மாநாடும் நடைபெறுவதால், அதன் அடையாளமாக தலைமைச் செயலக வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்றை நட்டு வைத்தார். பின்னர் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், தொழில் சுற்றுச்சூழல் இரண்டும் சமுதாயத்தின் சம நண்பர்கள் என குறிப்பிட்டார்.