vc - cm stalin  pt
தமிழ்நாடு

’ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளது’ - துணை குடியரசு தலைவரை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த துணைக்குடியரசு தலைவர் ஜகதீப் தன்கரை, ஜனநாயக விரோத சக்தி என முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் 142ஆவது பிரிவை ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையைப் போன்று உச்ச நீதிமன்றம் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள, துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர், உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இதற்கு தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளர் முதலமைச்சர் ஸ்டாலின்,

அதில், “ அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளைச் சிதைத்து, பொது விவாதத்தில் வலதுசாரி கருத்துகளைத் திணிக்க முற்படும் தற்போதைய தீங்கானது, கவர்னர்கள், துணை ஜனாதிபதி, அவ்வளவு ஏன் மாண்புமிகு ஜனாதிபதி உட்பட அரசியலமைப்புப் பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.

யாரும் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது. ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசாங்கங்கள் நடத்தப்பட வேண்டும். சம்பிரதாயத்திற்காக நியமிக்கப்படுபவர்களால் அரசு நடத்தப்படக்கூடாது. இதையே நமது சுப்ரீம்கோர்ட்டும் சுட்டிக்காட்டி உள்ளது, வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தீர்ப்பு தவறான வழிமுறையைச் சரிசெய்யும் நகர்வாகும்.

முக ஸ்டாலின்

ஆகவே, இந்த வரவேற்கத்தகுந்த சீர்திருத்த நடவடிக்கை பல ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய தேவை என்பது, இந்த சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைத்தப்படுவதை உறுதிசெய்வதே! ” என்று பதிவிட்டுள்ளார்.