அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், குற்றவாளியை சில மணி நேரங்களில் கைது செய்த பிறகும், ஆதாரத்தை திரட்டிய பின்னரும் அரசை குற்றஞ்சாட்டுவது, அரசியல் ஆதாயத்திற்கானது என குற்றஞ்சாட்டினார். இந்த வழக்கை விரைந்து விசாரித்து, 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார்.