நமது எம்ஜிஆர் நாளிதழ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ்தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக அங்கீகரித்துள்ளார்.
நமது எம்ஜிஆர் நாளிதழ் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி முதலமைச்சர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் என்று குறிப்பிட்டுள்ளார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை தமிழக அரசோ, அமைச்சர்களோ விமர்சனம் செய்யாத நிலையில் நமது எம்ஜிஆர் நாளிதழ் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து செய்திகளை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.