தமிழ்நாடு

பரிவுடன் கேட்டார் பிரதமர்: முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

பரிவுடன் கேட்டார் பிரதமர்: முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

Rasus

தமிழகத்தின் கருத்தை பிரதமர் மோடி பரிவுடன் கேட்டதாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கோரி பிரதமரைச் சந்தித்த முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தின் கருத்துக்களைப் பிரதமர் பரிவுடன் கேட்டதாகத் தெரிவித்தார்.

இந்தப் பிரச்னையில் தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன் என்று பிரதமர் கூறியதாகவும் பன்னீர் செல்வம் தெரிவித்தார். தமிழர்களின் உணர்வுகளை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன் என்று பிரதமர் கூறியதாகவும் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பை வழங்கவில்லை எனவும் அதே சமயத்தில் மாநில அரசு இது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் கூறியதாகவும் பன்னீர் செல்வம் தெரிவித்தார். இது தொடர்பான மாநில அரசின் நடவடிக்கை என்ன என்பதை விரைவில் காண்பீர்கள் என்றும் முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.