தமிழ்நாடு

உதயமானது மயிலாடுதுறை மாவட்டம்: நிர்வாக செயல்பாடுகளை தொடங்கி வைத்த முதல்வர்!

webteam

தமிழகத்தின் 38வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறையின் நிர்வாக செயல்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களை உள்ளடக்கி, மயிலாடுதுறை புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டது. ஏப்ரல் 7-ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மயிலாடுதுறை மாவட்ட செயல்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைத்தார்

முன்னதாக, தமிழகத்தில் 32 மாவட்டங்களாக இருந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, நெல்லையில் இருந்து தென்காசி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.