தமிழ்நாடு

'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' - திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

webteam

மாமல்லபுரத்தில் நெகிழிக்கான மாற்று பொருட்களை வழங்கி, 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற சிறப்பு முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. இதனையடுத்து நெகிழிக்கு மாற்றான பொருட்கள் குறித்து அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நெகிழிக்கு மாற்றான பொருட்கள் குறித்த முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள 13 அரங்குகளையும் பார்வையிட்டார்.

சணல் பைகள், செம்புக் குவளைகள், தேங்காய் சிரட்டையால் செய்யப்பட்ட கலைநயமிக்க பொருட்கள், பாக்குமட்டை, பனஓலை, கரும்பு  சக்கையால் செய்யப்பட்ட பொருட்கள், மரத்தாலான பேனா ஆகியவை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.