தமிழ்நாடு

ரூ.2,515 கோடியில் 16 புதிய நிறுவனங்கள்‌ : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

webteam

2019 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 16 புதிய நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி மூலம் ‌எக்கி ஹோமா பிரைவேட் லிமிடெட், சிர்மா டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் ரெனாட்டஸ் ப்ரோகான் பிரைவேட் லிமிடெட் அகிய 3 நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமையவுள்ள அமெரிக்க நிறுவனமாகிய டிபிஐ காம்போசைட்ஸ் , கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற் பூங்காவில் அமையவுள்ள ஹைடெக் கார்பன் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

அத்துடன் திருவள்ளூர் மாவட்டம் இண்டோஸ்பேஸ் தனியார் தொழிற் பூங்காவில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மஹிந்ரா ஸ்டீல் சர்வீஸ் சென்டர் உள்ளிட்ட 16 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி துவங்கிவைத்தார். மொத்தம் 2 ஆயிரத்து 515 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் இந்த நிறுவனங்களால் 9 ஆயிரத்து 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.