தமிழ்நாடு

பிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் பழனிசாமி?

பிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் பழனிசாமி?

Rasus

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்காக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க முதலமைச்சர் பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசும் சமீபத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. இந்நிலையில் ஜூன் 16-ம் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில்  பங்கேற்க முதலமைச்சர் பழனிசாமி ஜூன் 15-ம் தேதி அன்று டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவும் முதலமைச்சர் பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்காக பிரதமர் மோடியிடம் நேரில் நன்றி தெரிவிக்க முதலமைச்சர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.