வெளிநாட்டினர் தமிழை விரும்பி கற்றுக்கொள்ளும் வேளையில் தமிழகத்தில் உள்ளோரில் சில தமிழை தவிர்ப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்தவர்களுக்கு மாநில அரசின் விருதுகளை வழங்கி பேசியபோது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.