தமிழ்நாடு

கோதாவரி-காவிரி இணைப்பால் 125 டிஎம்சி தண்ணீர் - முதலமைச்சர் பேச்சு

கோதாவரி-காவிரி இணைப்பால் 125 டிஎம்சி தண்ணீர் - முதலமைச்சர் பேச்சு

webteam

கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு மூலம் தமிழகத்திற்கு 125 டிஎம்சி நீர் கிடைக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் 90 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 3 மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். அத்துடன் சாலை பாதுகாப்பு தொடர்பான குறும்படத்தையும் வெளியிட்டார். பின்னர் உரையாற்றிய அவர், அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களையும் அரசு உரி‌ய நேரத்தில் நிறைவேற்றி வருவதாக கூறினார். சேலம்-சென்னை பசுமை ‌வழி சாலை அமைப்பதன் மூலம் தொழில் வளம் பெருகும் என கூறி‌ய அவர், ஆத்தூர் புறவழிச்சாலை அமைக்க 55 கோடி ரூபாய்க்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு மூலம் தமிழகத்திற்கு கோதாவரியில்‌ இருந்து 125 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும் என்றும், அதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளதாகவும் பழனிசாமி கூறினார். மேலும் தெலங்கானா, ஆந்திரா வழியாக கோதாவரி நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என்றும், நீர் பிரச்னையில் குறிப்பிடத்தகுந்த தீர்வாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.