ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக எடுக்கவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து அந்நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 9ம் தேதி இதை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அங்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதித்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுகளின் மீது எடுக்கவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமைச்செயலாளர், அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.