முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. சாமானியர்கள் தவிர்த்து மருத்துவர்கள், போலீஸார், துப்புரவு பணியாளர்கள் என ஆரம்பத்தில் களப் பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் எம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என கொரொனா பாதிப்பு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.
அண்மையில் முதலமைச்சர் அலுவல செயலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் இறந்துபோனார்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதேசமயம் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.