தமிழக முதலமைச்சர் பிரதமரை சந்தித்தது அரசு முறை சந்திப்புதான் என பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்துப் பேசினார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, பிரதமருடன் பழனிசாமி சந்தித்து பேசியது இதுவே முதன்முறையாகும்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இது அரசு முறை சந்திப்பு தான் என்றும், அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.