உற்பத்தியாளர்கள் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொள்முதல் விலை அதிகரிப்பை தொடர்ந்து ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் உற்பத்தியாளர்கள் நலன்கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உற்பத்தியாளர் நலன்கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைவிட குறைவான விலையிலேயே ஆவின் பால் விற்கப்படுகிறது.
கால்நடை வளர்ப்பு என்பது சாதாரணமானதல்ல; அந்தக் கஷ்டத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். கால்நடை தீவனத்தை ரேசன் கடைகளில் விற்பது சாத்தியமில்லை. விவசாயிகளுக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்பட்டால் திறக்கப்படும்” எனத் தெரிவித்தார்.