பணக்காரர்கள் தான் கொரோனாவை இறக்குமதி செய்தார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று மட்டும் 62 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் பாஸிட்டிவ் கேஸ்களை நெகட்டிவ் கேஸ்களாக கொண்டு வந்துவிடுவோம்.
கொரோனாலாம் பணக்காரர்களுக்கு வந்த நோய்தான். ஏழைகளுக்கு எங்கு வந்தது..? பணக்காரர்கள்தான் கொண்டுவந்து விட்டார்கள். வெளிநாட்டிலிருந்து, வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட நோய் கொரோனா. பணக்காரர்களை கண்டால்தான் பயமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள்தான் வெளிநாட்டிற்கு சென்றுவந்து நோயை இறக்குமதி செய்தனர்” எனத் தெரிவித்தார்.