சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்காக 81 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 20 முகாம்களில் 2,166 பேர் தங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கட்டளை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். இதற்கு முன்னதாக, கொடுங்கையூரில் கால்வாய் அடைப்பை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், மீண்டும் அடைப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட இரட்டை ஏரி பகுதிக்குச் சென்ற முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், தெருக்களில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, பாரத் ராஜீவ்காந்தி நகரில் மருத்துவ முகாமை பார்வையிட்ட முதலமைச்சர், அங்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர், சிட்லபாக்கம், கீழ்க்கட்டளை ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆய்வு செய்தனர்.