முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11.15 மணிக்கு தலைமைச்செயலகம் செல்கிறார். இதையொட்டி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்வகையில் சில கோப்புகளில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.