தமிழ்நாடு

பேச்சை குறைத்துக்கொண்டு செயலில் இறங்கியுள்ளோம்: முதல்வர் பழனிசாமி

webteam

வேலூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், பேச்சை குறைத்துக்கொண்டு செயலில் இறங்கியிருக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இன்று வேலூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது தியாகி கக்கனுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். நாட்டிற்காக உழைத்தவர்களை அவர் ஆதரித்தார். தமிழக கோவில்களில் சமபந்தி திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களையும் சென்றடைந்துள்ளது. 

ரூ.66 கோடி செலவில் புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ரூ.12 கோடி செலவில் பாலம், சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் 8 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரூ.235 கோடி செலவில் வேலூர் மாவட்டத்தில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்படும்.

பேச்சை குறைத்துக்கொண்டு செயலில் இறங்கியிருக்கிறோம். தொழில் துறையில் தமிழகம் முன்னேற வித்திட்டவர் ஜெயலலிதா. மழை நீரை சேமிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. நிலத்தடி நீர் உயர, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழகம் உணவு உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது என்று கூறினார்.