வேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேளாண் மசோதா தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், வேளாண் மசோதா விவசாயிகளை பாதிக்காது என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மசோதா உணவுப் பொருட்கள் பதுக்கப்படுவதை தடுக்கும் என்றும், குறைந்தபட்ச ஆதாரவிலை அடிப்படையில் நடைபெறும் நெல் கொள்முதலை இந்த மசோதா எந்த வகையிலும் பாதிக்காது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த மசோதாவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலாக்குவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் இந்த மசோதாவை அரசியலாக்க வேண்டாம் எனவும் அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார்.