தமிழ்நாடு

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: முதலமைச்சர் திட்டவட்டம்

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: முதலமைச்சர் திட்டவட்டம்

webteam

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி நகராட்சி 50-வது ஆண்டு விழாவை கொண்டுடாடுவதையொட்டி பொன்விழா நினைவுத்தூணை முதலமைச்சர் திறந்துவைத்தார். மேலும் ரூ.2 கோடிய 55 லட்சம் மதிப்பீட்டிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், மேட்டூர் அணையை தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்தார். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 90 ஏரிகள் தூர்வாரப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எந்த காலத்திலும் தமிழக அரசு அனுமதிக்காது என அவர் திட்டவட்டமாக கூறினார்.